SP பட்டினம் ஜாமிஆ அல்அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற கோபாலப்பட்டிணம் ஆலிம்கள்!




ராமநாதபுரம் மாவட்டம் SP பட்டினத்தில் (சுந்தரபாண்டிய பட்டினம்) உள்ள ஜாமிஆ அல் அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரியில் மெளலவி ஆலிம் பட்டம் பெற்ற ஜவாஹிருல்லா , ஹனிபா ,  லத்தீப் .

ஹிஜ்ரீ 1445 ஷஃபான் பிறை 20 (02.03.2024) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நமது ஜாமிஆவின் பதிமூன்றாம் ஆண்டு மௌலவி, ஆலிம் & 31 ஆம் ஆண்டு அல்ஹாஃபிழ் மற்றும் ஒன்பதாம் ஆண்டு அல்ஹாஃபிழுல் ஃபாழில் பட்டமளிப்பு விழா கீழ்க்காணும் நிகழ்வு முறைப்படி பாக்கவி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது இதில் மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள் 

இவ்விழாவில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மூன்று நபர்கள் பட்டம் பெற்றார்கள் 










மௌலவி, அஃப்ழலுல் உலமா,
K.அப்துல் லத்தீஃப் அல்குத்ஸி B.B.A

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகிலுள்ள கோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு பழைய காலனியை சேர்ந்த
(மர்ஹும்)A.நெய்னா முஹம்மது,(மர்ஹும்)S.அபுல் ஹசன் அலி அவர்களின் பேரனும்
(மர்ஹும்)N.காதர் மைதீன்,K.பாத்துமுத்து சுகரா தம்பதியினரின் மகன் மௌலவி, அஃப்ழலுல் உலமா,K.அப்துல் லத்தீஃப் அல்குத்ஸி B.B.A
எஸ்.பி.பட.டிணத்திலுள்ள ஜாமிஆ அல் அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரியில் பயின்று (அல்குத்ஸி) ஆலிம் பட்டம் பெற்றுள்ளார்கள்



மௌலவி, அஃப்ழலுல் உலமா,
ஹனிபா அல்குத்ஸி B.B.A

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகிலுள்ள கோபாலப்பட்டிணம் சின்னபள்ளிவாசல்  தெருவைச் சேர்ந்த  மர்ஹும் முகம்மது அலியார், மர்ஹும் முகம்மது சாலிகு அவர்களின் பேரனும்  ஜனாப் முகம்மது இப்ராகிம் - ஜாஹ்ரா பானு  தம்பதியினரின் மகன் மெளலவி ஹனிபா குத்துஸி  எஸ்.பி பட்டணத்திலுள்ள ஜாமிஆ அல்ழ அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரியில் பயின்று  (அல்குத்ஸி) ஆலிம் பட்டம் பெற்றுள்ளார்கள்


மொளலவி, அஃப்ழலுல் உலமா,
A.முகம்மது ஜவாஹிருல்லாஹ்
அல்குத்ஸி B.B.A

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகிலுள்ள கோபாலப்பட்டிணம் ஸஃபா(நடுத்) தெருவைச் சேர்ந்த ( மர்ஹும் K.M.S.அப்துல் சமது,அம்மாபட்டினம் மர்ஹும் S.M.T அபுசாலிகு அவர்களின் பேரனும்  ஜனாப் K.M.A.அப்துல் கரீம் , A.மும்தாஜ் பேகம் தம்பதியினரின் மகன் மெளலவி, அஃப்ழலுல் உலமா A.ஜவாஹிருல்லாஹ் அல்குத்ஸி 
எஸ்.பி பட்டணத்திலுள்ள ஜாமிஆ அல் அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரியில் பயின்று (அல் குத்ஸி) ஆலிம் பட்டம் பெற்றுள்ளார்கள்.




மார்க்க சேவைகளில் சிறந்து விளங்கிடவும் மற்றும் மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்றிட GPM MEDIA-வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments