கோபாலப்பட்டிணம் ரஹ்மானிய்யா குர்ஆன் மதரஸா ஆண்டு விழாவும் மற்றும் ரஹ்மானியா பெண்கள் மதரஸா 25-வது ஆலிமா பட்டமளிப்பு விழா நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 29/02/2024 வியாழக்கிழமை கோபாலப்பட்டிணம் ரஹ்மானிய்யா குர்ஆன் மதரஸா ஆண்டு விழாவும், 01/03/2024 வெள்ளிக்கிழமை ரஹ்மானிய்யா பெண்கள் மத்ரஸாவின் பட்டமளிப்பு விழாவும், மஃரிப் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சியும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது
ஆலிமா பட்டமளிப்பு விழா 01-03-2024 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் ஜமாஅத்தார்கள் தலைமையிலும் மெளலவி ஹாஃபிழ், R.ஷாஹுல் ஹமீது அல்குத்ஸி அவர்கள் கிராஅத் ஓத,
கோபாலப்பட்டிணம் ஹிப்ழு மதரஸா ஆசிரியர் மௌலவி
ஹாஃபிழ்.A.ரியாழ் முஹம்மது அல்குத்ஸி அவர்கள் இஸ்லாமிய கீதம் பாட,
கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் இமாம் மெளலவி, ஹாஃபிழ் பாஜில் S.S. ஹாஜா ரஜபுத்தீன் மன்பா அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க,
தொண்டி, M.R.பட்டினம், அல் அஸ்ஹரிய்யா அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி ஹாஃபிழ் H.முஹம்மது ஜலாலுத்தீன் அன்வாரி அவர்கள் ஸனது வழங்கி சிறப்பு பேருரை நிகழ்த்தினார்கள்
மேலும் மணமேல்குடி அன்னை கதீஜா கால்லூரி அரபுத்துறை பேராசிரியர் மெளலவி ஹாஃபிழ்.M.சையது அபுதாஹிர் தாவூதி அவர்கள் பேச்சுப்போட்டி நடுவராக பங்கேற்கிற்றார்
மெளலானா மௌலவி அல்ஹாஜ் N.M.A.இக்பால் பாகவி ஹரத் அவர்கள், மெளலவி ஹாஃபிழ், M.S.கலீலுர் ரஹ்மான் ஸிராஜி அவர்கள் பேராசிரியர், அரபுத்துறை, அன்னை கதீஜா காலேஜ், மணமேல்குடி, மெளலானா,மெளலவி.J.உஸ்மான் அலி நாஃபிஈ ஹஜிரத் அவர்கள் இமாம், அவுலியா நகர் பள்ளிவாசல், கோபாலப்பட்டிணம், மெளலானா,மெளலவி M.S.முஹம்மது ஃபிர்தவ்ஸ் உலவி அவர்கள் இமாம், கடற்கரை பள்ளிவாசல், கோபாலப்பட்டிணம், மெளலானா, மௌலவி A.ராஜா முஹம்மது மஸ்லஹி அவர்கள் துணை இமாம், காட்டுக்குளம் பள்ளிவாசல், கோபாலப்பட்டிணம், மௌலானா.ஹாபிழ், F.ஹாஜா அலாவுதீன் வாஹிதி அவர்கள் இமாம், ஜூம்ஆ பள்ளிவாசல், மீமிசல். மௌலானா, அல்ஹாஜ் K.முஹம்மது அப்துல்லாஹ் மன்பஈ அவர்கள், மௌலானா.அல்ஹாஜ் A.சாதிக் ஹுஸைன் ரஹ்மானி அத்ரமி அவர்கள், மௌலானா, அல்ஹாஜ், R.M.A.R.ஹபீப் முஹம்மது ரஹ்மானி அத்ரமி அவர்கள், மௌலானா ஹாபிழ் S.முஜீப் ரஹ்மான் ரஷாதி அவர்கள், மெளலானா மெளலவி S.ஜகுபர் சாதிக் முனீரி அவர்கள், கோபாலப்பட்டிணம். ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்
அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் கோபாலப்பட்டினத்தில் ரஹ்மானியா குர்ஆன் மதரஸாவின் ஆண்டு விழா & ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் 25வது ஆலிமா பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
முதல் நாள் அமர்வு:
29-02-2024 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 6.00மணி வரை ரஹ்மானியா குர்ஆன் மதரஸாவில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அத்துடன் முதல் நாள் அமர்வு நிறைவு பெற்றது.
இரண்டாம் நாள் அமர்வு:
01-03-2024
வெள்ளி கிழமை காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை மாணவர்களுக்கான பயான் போட்டியும் அதனை தொடர்ந்து மதியம் 1.10 வரை ஆலிமா பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் 25 ஆலிமாக்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
சிறப்புரை &ஸனது வழங்கியவர்கள்:
தொண்டி, M.R.பட்டினம், அல் அஸ்ஹரிய்யா அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி ஹாஃபிழ் H.முஹம்மது ஜலாலுத்தீன் அன்வாரி அவர்கள் ஸனது வழங்கி சிறப்பு பேருரை நிகழ்த்தினார்கள்
இறுதியாக மஃரிப் தொழுகைக்கு பிறகு இஷா வரை பயான் மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு பயான் மௌலானா மௌலவி ஹாபிழ் K.M சாகுல் ஹமீது பாகவி ஹஜ்ரத் தலைமை இமாம் ஜாமிஆ மஸ்ஜித் தோப்புத்துறை சிறப்புறை ஆற்றினார்கள்
.
அதன் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இறுதியாக நன்றியுரை
ஜனாப் SRMJ.முஹம்மது பிர்தௌஸ்M.A, M.Phil,அவர்கள் (கோபாலபட்டினம்) நிகழ்த்தினார்கள்.
அல்லாஹ்வின் உதவியால் இரண்டு நாள் நிகழ்வு சிறப்பாக முடிந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.