ஆவுடையார்கோவில் அருகே குளம், ஏரி ஆக்கிரமிப்பு வருவாய்த்துறையினர் நில அளவீடு செய்தனர்




அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா கதிராமங்கலம் ஊராட்சியில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள குளம் மற்றும் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூர்தர்கிங் அறிவுறுத்தலின்படி வருவாய் ஆய்வாளர் போத்திராஜ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் சாலமன் இம்மானுவேல், நில அளவீட்டாளர் கங்கா மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று குளம் மற்றும் ஏரியை பார்வையிட்டு நில அளவீடு செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments