வேலைவாய்ப்பை ஏற்படுத்த இளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி முகாம் வருகிற 9, 16-ந் தேதிகளில் நடக்கிறது




வேலைவாய்ப்பை ஏற்படுத்த இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சிக்கு முகாம் வருகிற 9, 16-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

இலவச திறன் பயிற்சி

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு இளைஞர் திறன் திருவிழாவானது புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், சார்பாக வருகிற 9-ந் தேதி அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், 16-ந் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

இலவச இளைஞர் திறன் பயிற்சிக்காக ஆள் சேர்ப்பு முகாமான இளைஞர் திறன் திருவிழாவில் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட 10-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ போன்ற அனைத்து படிப்பும் படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

தனியார் நிறுவனங்கள்

மேலும், இலவச திறன் பயிற்சிக்கு இளைஞர்களை தேர்வு செய்வதற்கு தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் 15 திறன் பயிற்சி நிறுவனங்களும் மற்றும் பிற திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. பல்வேறு திறன் பயிற்சிக்காக இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இலவச திறன் பயிற்சிக்கு பிறகு தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படவுள்ளது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு பயனடையலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments