தொண்டி அருகே கடலில் மிதந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 25 அடி நீள டேங்க் மீட்கப்பட்டு, செயலிழக்க வைக்க அனுப்பி வைக்கப்பட்டது.
கடலில் மிதந்தது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நடுக்கடலில் ஒரு வாரத்திற்கு முன்பு நீண்ட உருளை போன்ற ஒரு பொருள் மிதந்தது. இதனை மீனவர்கள் கவனித்து செல்போனில் படம் எடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து கடலுக்குள் சென்று அதனை பார்வையிட்ட போலீசார், அது ராக்கெட் அல்லது ஏவுகணையின் உதிரிப்பாகம் என்பதை கண்டுபிடித்தனர். மீனவர்கள் யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்து இருந்தனர். அந்த பொருள் காற்றின் வேகத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும் என்று ஒரு வாரத்திற்கு மேலாக எதிர்பார்த்தனர். ஆனால் அது கரையை நோக்கி வரவில்லை.
25 அடி நீளம்
எனவே அதில் எழுதப்பட்டிருந்த எழுத்து மற்றும் எண் போன்றவற்றை படம் எடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்தில் இருந்து வந்த அதிகாரி சஜூ தலைமையிலான குழுவினர், சுமார் 2 கடல் மைல் தூரத்துக்கு படகில் சென்றனர். திருப்பாலைக்குடி-தேவிபட்டினம் இடையே கடலில் மிதந்த அந்த உருளையை ஆய்வு செய்தனர். அதில் ஆபத்து பொருள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு, மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டு திருப்பாலைக்குடி அருகே உள்ள பத்தனேந்தல் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
25 அடிக்கும் அதிகமான நீளத்தில் அதிக எடையுடன் இருந்த அந்த பொருளை வாகனத்தில் ஏற்றி திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்துக்கு கொண்டு சென்றனர்.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜனவரி 12-ந்தேதி ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி.-62 ராக்கெட்டின் ஒரு பகுதி வெடித்து சிதறியதில் சுமார் 600 கிலோ எடை கொண்ட ேடங்க் கடலில் விழுந்துள்ளது. அது தற்போது கரை சேர்ந்து உள்ளது. இதனை திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்திற்கு கொண்டு சென்று செயலிழக்க செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளனர். கரைக்கு கொண்டுவரப்பட்ட ராக்கெட் டேங்கை காண ஏராளமானோர் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.