அறந்தாங்கி ஐகேபி சார்பில் வீடுதேடி ஃபித்ரா விநியோகம்








புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில் ரூ1.25 லட்சம் மதிப்புள்ள ஃபித்ரா அரிசி ஏழைகள் வீடுதேடி வழங்கப்பட்டது.

ரம்ஜான் மாத இறுதியில் ஏழைகளுக்கு வழங்கப்படும் ஃபித்ராவை மனிதநேய ஜனநாயக கட்சியின் இஸ்லாமிய கலாச்சார பேரவை நிர்வாகிகள் கூட்டாக வசூல் செய்து ஏழைகள் வீடுதேடி விநியோகம் செய்யும் சேவையை பல வருடங்களாக தொடர்ந்து செய்துவருகின்றனர். இவ்வமைப்பினர் இந்த வருடமும் கூட்டாக வசூல் செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தனர்.

மாவட்ட  அவைத் தலைவர் அப்துல் ஹமீது தலைமையில் மாவட்ட துணை செயலாளர்  அப்துல் ஹமீது முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி மற்றும் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி ஆகியோர் ஏழைகளுக்கு ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான 5 கிலோ ஃபித்ரா அரிசி கொண்ட பைகளை வழங்கி துவங்கி வைத்தனர். அதன் பின்னர் நகர செயலாளர் முகம்மது அலி, தொண்டர் அணி செயலாளர் சேக் அப்துல்லாஹ். மாணவர் அணி செயலாளர் முகம்மது முஹ்சீன் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள் ஏழைகளின் வீடுகளை தேடி சென்று ஃபித்ராவை வழங்கினார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments