மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது மற்றும் அதற்கான படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது குறித்த 5-வது இணைய வழி கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை, இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரத்தின் ரியாத் மண்டல ‘விழி’ (மனிதவள மேம்பாட்டு அணி) அமைப்பு நடத்தவுள்ளது.
2026-ஆம் கல்வியாண்டிற்கான இந்த முக்கிய வழிகாட்டி நிகழ்ச்சி, எதிர்வரும் மே 23, 2026 (சனிக்கிழமை) அன்று ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது.
நேரம் மற்றும் ஜூம் விபரம்
சவுதி, குவைத், கத்தார், பஹ்ரைன் நேரம்: இரவு 7:00 மணி
அமீரக நேரம்: இரவு 8:00 மணி
இந்திய நேரம்: இரவு 9:30 மணி
ஜூம் இணைப்பு (Zoom ID): https://us02web.zoom.us/j/84295529194
சிறப்பு விருந்தினர்
இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற UPSC, TNPSC மற்றும் நீட் (NEET) தேர்வு வழிகாட்டியான பொறியாளர் J.ரியாஸ் அஹமது அவர்கள் சிறப்புரையாற்றி, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.
அழைப்பு
10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மற்றும் படித்து முடித்த மாணவர்கள், தங்களின் பெற்றோர்களுடன் இந்த இணைய வழிப் பயிலரங்கில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிகாரமிக்க அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகளை அறிந்து, எதிர்காலத் தலைமுறையைத் தயார் செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்துமாறு ‘விழி’ மனிதவள மேம்பாட்டு அமைப்பினர் சமூக அக்கறையுடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.