புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, அம்மாபட்டினம் பட்டதாரிகள் கல்வி இயக்கம் (PKI) சார்பில், பள்ளி முடித்த மாணவ-மாணவிகளுக்கான பிரம்மாண்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாளை (மே.23, சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
அம்மாபட்டினம் வடக்குத்தெரு, மஸ்ஜிதுல் அமீன் பள்ளிவாசல் அருகில் உள்ள ஈத்கா மைதான அரங்கத்தில், காலை 9.30 மணிக்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி துவங்குகிறது.
இந்நிகழ்ச்சிக்கு பட்டதாரிகள் கல்வி இயக்கத்தின் தலைவர் திரு. ஆவுடை யூனுஸ் தலைமை தாங்குகிறார். இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. H. முஹம்மது இர்பான் வரவேற்புரை ஆற்றுகிறார். ஜமாஅத் தலைவர்கள், மேலாண்மைக் குழு, நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கோட்டைப்பட்டினம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு. E. வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். சென்னை விஸ்டம் கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டி அமைப்பின் கல்வி ஆலோசகர் திரு. M. அப்துல் மதீன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விரிவான கல்வி வழிகாட்டுதல்களை வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிப் படிப்பை முடித்த மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் புரொஜெக்டர் மூலம் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. குறிப்பாக, கல்லூரிகளில் சிறந்த பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வது எப்படி, குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுப்பது எப்படி, கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் நமக்கேற்ற துறை எது, மற்றும் பொறியியல், மருத்துவம் அல்லாத பிற சிறந்த படிப்புகள் எவை என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், மத்திய பல்கலைக்கழகங்கள், IIT, IIM போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களில் சேரும் வழிமுறைகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது எப்படி, பெண்களுக்கு ஏற்ற சிறந்த படிப்புகள் மற்றும் குறைந்த செலவில் உள்ள படிப்புகள் எவை போன்ற பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம் ஆகும். எனவே, மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களின் எதிர்காலக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு இயக்கத்தின் செயலாளர் திரு. A. முஹம்மது ஜலீல் மற்றும் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.