ஹஜ் பெருநாளை முன்னிட்டு, ஆர். புதுப்பட்டினம் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் நடத்தும் 13 ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி (APL - Al Ameen Premier League) வரும் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடர் குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு,
தலைமை மற்றும் முன்னிலை
இப்போட்டியானது அல்-அமீன் தலைவர் A. பயாஸ் கான் தலைமையில், ஊர் ஜமாத்தார்கள் மற்றும் அல்-அமீன் இளைஞர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
பரிசுத் தொகைகள் மற்றும் ஸ்பான்சர்கள்
போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்குப் பின்வரும் ரொக்கப் பரிசுகளும் சுழற்கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன,
வெற்றிப் பரிசுகள் விவரம்
முதல் பரிசு
₹ 20,026
வழங்குபவர்
சிட்டி ஹார்டுவேர்ஸ் & எலெக்ட்ரிக்கல்ஸ், மீமிசல்
இரண்டாம் பரிசு
₹ 16,026
வழங்குபவர்
(மர்ஹூம்) அப்துல் ஹமீத்
மூன்றாம் பரிசு
₹ 12,026
வழங்குபவர்
M.முஹம்மது முனாப் B.E, MECH
நான்காம் பரிசு
₹ 8,026
வழங்குபவர்
S.சேக் அப்துல்லா
ஐந்தாம் பரிசு
₹ 6,026
வழங்குபவர்
S.வாசிர் கான் & M. பஹார்த் ஹுசைன்
சிறப்புப் பரிசுகள்: மேன் ஆஃப் தி சீரிஸ், மேன் ஆஃப் தி மேட்ச், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த பேட்ஸ்மேன், மெய்டன் ஓவர் மற்றும் ஹேட்ரிக் சிக்ஸ்/விக்கெட் எடுக்கும் வீரர்களுக்குத் தனித்தனியே சிறப்புப் பரிசுகளும் கோப்பைகளும் (Trophies) வழங்கப்பட உள்ளன.
போட்டி விதிமுறைகள் மற்றும் முக்கியத் தகவல்கள்
அணிகள் சேர்க்கை: முதலில் பதிவு செய்யும் 16 அணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். போட்டிகள் 'Fixed Ballet' அடிப்படையில் நடத்தப்படும்.
நுழைவுக் கட்டணம்: ₹.1,200 (முன்பணம் ₹.500 செலுத்தி அணியை உறுதி செய்ய வேண்டும்).
நாள் & நேரம்: 30, 31:05:2026 (காலை 10:00 மணி முதல்)
இடம்: அல்-அமீன் விளையாட்டு மைதானம்.
விதிமுறைகள்
- போட்டிகள் 'Rubber' பந்து முறையில் நடத்தப்படும்.
- லீக் சுற்று ஆட்டங்கள் முதல் நாளுக்குள் நிறைவு செய்யப்படும்.
- ஒரு அணியில் விளையாடும் வீரர்கள் மற்றொரு அணியில் விளையாட அனுமதி இல்லை.
- மது அருந்திவிட்டு விளையாடக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இயற்கைச் சீற்றம் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களின் போது, கமிட்டியின் முடிவே இறுதியானது.
தொடர்புக்கு
அணிகளைப் பதிவு செய்யவும், கூடுதல் விபரங்களை அறியவும் கீழே உள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
93452 29673 (GPay வசதி உள்ளது)
இவண்: அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், ஆர். புதுப்பட்டினம்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.