மீமிசலில் காட்டு மாடு நடமாட்டம்: பொதுமக்கள் பட்டாசு வெடிக்கவோ, சத்தம் எழுப்பவோ வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தல்!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு மாடு (காட்டெருமை) ஒன்றின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இன்று காலை முதல் வனத்துறை பணியாளர்கள் அப்பகுதியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

​காட்டு மாட்டைப் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அநாவசியமாக பட்டாசுகள் வெடிக்கவோ அல்லது அதிக சத்தம் எழுப்பவோ வேண்டாம் என்று வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதிக சத்தம் எழுப்பினால் விலங்கு மிரண்டு குடியிருப்புப் பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

​வனத்துறையினர் மேற்கொண்டு வரும் அனைத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு வனத்துறை அதிகாரிகள் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments