உடல் எடையைக் குறைக்கும் கரும்புச் சாறு - ஆய்வறிக்கை



உடல் எடையைக் குறைக்க பலர் உடல் பயிற்சி மற்றும் நடைப் பயிற்சி போன்ற ஆரோக்கியமான விஷயங்களை மேற்க்கொள்கின்றனர், அது மட்டுமல்லாது சிலர் விளம்பரங்களை நம்பி மாத்திரைகளை விழுங்கிவிட்டு பக்க விளைவுகளை வரவழைத்துக் கொள்கின்றனர். இதுப் போன்று சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டுபிடித்து மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். பருமனான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது.

இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. கரும்பு சாறு பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரியவரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல் உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments