மணமேல்குடி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர். நண்பர் படுகாயமடைந்தார்.
கார்-மோட்டார் சைக்கிள் மோதல்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வேப்பங்குளத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் மகன் பதிவரதன் (வயது 23). நாட்டு சாலை கருப்பூரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பாலாஜி (24), தக்காளி காட்டை சேர்ந்தவர் கண்ணன் மகன் சக்திவேல் (23).
நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே உள்ள மணமேல்குடிக்கு சென்று கொண்டிருந்தனர். மேலஸ்தானம் என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக அம்மாபட்டினத்தை சேர்ந்த சல்மான் (28), சபீபுல்லா (28), முஜாஹஜித் (40) ஆகியோர் வந்த காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது.
2 பேர் உயிரிழப்பு
இதில் படுகாயமடைந்த பதிவரதன், பாலாஜி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்த சக்திேவலை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தகவல் அறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பதிவரதன், பாலாஜி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணமேல்குடி அருகே கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.