மணமேல்குடி அருகே மீனவர் வலையில் சிக்கிய 12 அடி நீள சேனைப்பாம்பு




மணமேல்குடி அருகே வடக்கம்மாபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சாமியப்பன், மீனவர். இவர் தனது படகில் பழனிசாமி, வெங்கடாசலம் ஆகியோருடன் குறைந்த ஆழத்தில் மீன்பிடிக்க பயன்படும் பட்டி வலையில் மீன்பிடித்தனர். அப்போது அவர்களுடைய வலையில் பாம்பு ஒன்று சிக்கியது. சுமார் 12 அடி நீளமுள்ள இந்த பாம்பு சேனைப்பாம்பு என்று அழைக்கப்படுகிறது. நீண்ட நேரமாக வலையில் சிக்கித் தவித்ததால் இந்த பாம்பு இறந்தது கிடந்தது. இந்த பாம்பு பொதுவாக சேற்றுப்பகுதிகளிலும், பொந்துகளிலும் உயிர் வாழும். குளிர்காலத்தில் மட்டுமே இந்த பாம்பு கரை பகுதிகளுக்கும், கரையோர ஆற்றுப்பகுதிகளுக்கும் வரும். 12 அடி நீளமுள்ள இந்த பாம்பு சிறிய வகை என்று மீனவர்கள் கூறுகின்றனர். பெரிய வகை பாம்புகள் 20 அடிக்கு மேல் இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த பாம்பு கணவாய் மீன்களை உணவாக உட்கொள்ளும். மனிதர்கள் நீச்சலடித்து செல்லும்போது குதிகால்களின் வெண்மை நிறத்தை வைத்து இந்த பாம்பு கடிக்கும். இந்த பாம்பு கடித்தால் சதைகளை பெயர்த்து எடுத்து விடும். கூர்மையான பற்களைக்கொண்டது. ஆனால் இந்த பாம்பு விஷத்தன்மையற்றது என்றும் மீனவர்கள் கூறுகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments