10-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை! அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வெளியீடு...!



பத்தாம் வகுப்பு பயிலும் தமிழக மாணவர்களுக்கான 2019-ஆம் ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார். பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி மார்ச் 29-ந்தேதி தேர்வு நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 29-ந்தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

முழு ஆண்டு தேர்வுகளுக்கு 3 மாதங்களே உள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.



மேலும் நடப்பு கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், இரண்டரை மணி நேரம் மட்டுமே தேர்வு நடக்கவுள்ளது. முன்பு மூன்றே கால் மணி நேரமாக இருந்த மொத்த தேர்வு மணியில் இருந்து அரை மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பும் ஆண்டின் துவக்கத்திலேயே வெளியிடப்பட்டாலும், தேர்வு நெருங்குவதால் மாணவர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகையால் புது தேர்வு முறைப்படி காலை 10:00 முதல் 12:45 மணி வரையிலும், பிற்பகலில் 2:00 முதல் 4:45 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். அதே சமயம் பழைய தேர்வு முறையில் பிளஸ் 2 தேர்வு எழுதும் தனி தேர்வர்களுக்கு பழைய மூன்றே கால் மணி நேரமே வழங்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் முதல் 15 நிமிடங்கள் தங்களது விபரங்களை விடைத்தாளில் பூர்த்தி செய்வதற்காகவும் வினாத்தாளை படித்துப் பார்ப்பதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தேர்வு எழுதக்கூடிய மாணவச்செல்வங்கள் அனைவரும் வெற்றியடைய கோபலப்பட்டினம் இணையதளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.


Post a Comment