மலேசியா கராத்தே போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவர் முஹம்மது ரபீக்



மலேசியாவில், சர்வதேச கராத்தே போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில், 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கராத்தே போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியை மலேசிய கல்வித்துறை அமைச்சகம் வெகு சிறப்பாக நடத்தியது.
கடந்த வாரம் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தில் இருந்து 5 பேர் கலந்துகொண்டனர். 50-55 கிலோ எடைக்குக் கீழே உள்ள பிரிவில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் முகமது ரபிக் கலந்துகொண்டார். இவர், மலேசியாவில் நடைபெற்ற போட்டியில்  தமிழகம் சார்பில் கலந்து கொண்டு மலேசியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் (வீரர்கள்) மாணவர்களிடம் சண்டையிட்டு, முதல் பரிசாகத் தங்கம் வென்றார். 



இதுகுறித்து மாணவர் முகமது ரபிக் கூறுகையில், "மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச பேட்டியில் தங்கம் வென்றது பெருமை அளிக்கிறது. எனது இலட்சியம்  ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுக்க வேண்டும் என்பதே. மேலும், தமிழக அரசு எனக்கு மாத பயிற்சிக்கு உதவித்தொகை மற்றும் சிறந்த பயிற்சிக்குத் தேவையான உடைகள் வழங்க வேண்டும்" என்றார். மாணவன் ரபிக்கிற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Post a Comment