புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை 24,326 பேர் எழுதுகின்றனர்



புதுக்கோட்டையில் இன்று மார்ச் -14 வியாழக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 24,326 பேர் எழுதவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 3,874 பேர், மாணவிகள் 3,754 என மொத்தம் 7628 பேர்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில்   மாணவர்கள் 4,713 பேர், மாணவிகள் 4,711 பேர் என மொத்தம் 9,424 பேர்.  

இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 3,532 பேர், மாணவிகள் 3,345 பேர் என மொத்தம் 6,877 பேர். 

மொத்தமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்கள் 12,119 பேர், மாணவிகள் 11,810 பேர் என 23,929 பேர் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூலம்  தேர்வெழுதுகின்றனர்.  தனித்தேர்வர்களாக 397 பேர். ஆக மொத்தம் 24,326 பேர் தேர்வெழுதவுள்ளனர்.


மார்ச் 14 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தேர்வு மார்ச்  29 ஆம் தேதி முடிவடைகிறது. தேர்வுப் பணிகளி முதன்மைக்கண்காணிப்பாளர்கள் 107 பேர், துறை அலுவலர்கள்  107 பேர், கூடுதல் அலுவலர்கள் 2 பேர், அறை கண்காணிப்பாளர்கள் 1361 பேர், பறக்கும் படையினர் 185 பேர் மற்றும் வழித்தட அலுவலர்கள்  தேர்வுப்பணியில் ஈடுபடவுள்ளனர்.

பள்ளி பருவத்தின் முதல் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் அனைவரும் எந்தவித பயமுமின்றி, மகிழ்ச்சியுடனும், சிறந்த முறையிலும் தேர்வு எழுதி வெற்றி பெற்று மாபெரும் சாதனை புரிய வேண்டுமென கோபாலப்பட்டினம் இணையதளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


Facebook Like:



Post a Comment

0 Comments