கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்குதல் மற்றும் புதிய கழிவறைக்கு அடிக்கல் நாட்டு விழா



கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா மற்றும் புதிய கழிவறைக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதியுடன், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன், ஜமாஅத்தார்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வின்போது, அமைச்சர் ரகுபதி மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து புதிய கழிவறை அமைக்கும் பணியைத் தொடங்குவதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  வழங்கப்பட்டன.
இந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், அப்பகுதி மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments