ராமநாதபுரம் அமமுக வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?



ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் வ.து.ந.ஆனந்தின் சொத்து மதிப்பு ரூ.4.53 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் அமமுக வேட்பாளராக வ.து.ந.ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கையிருப்பாக ரூ.1 லட்சம், 2.40 லட்சம் மதிப்புள்ள 80 பவுன் நகைகள் உள்பட அசையும் சொத்துக்கள் மொத்தம் ரூ.1.34 கோடியும், அசையாச் சொத்துகள் ரூ.3.19 கோடி என மொத்தம் 4.53 கோடி சொத்துகள்இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமமுகவின் மாற்று வேட்பாளரான வ.து.ஆனந்தின் மனைவி வனிதாவின் கையிருப்பாக ரூ.60 ஆயிரமும், ரூ.35 லட்சம் மதிப்புள்ள 150 பவுன் நகைகள் என மொத்தம் ரூ.36 லட்சத்து 69 ஆயிரம் சொத்து மதிப்பாக காட்டப்பட்டுள்ளது.  அமமுக வேட்பாளர் தேர்தல் விதிமுறையை மீறி வாகனங்களில் சென்றதாக கேணிக்கரை, கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட இடங்களில் பதிவான வழக்குகள் தவிர வேறு வழக்குகள் இல்லை எனவும் உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments