புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள நாகுடியில் வியாழக்கிழமை குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காரவயல், நாகுடி, கீழ்க்குடி அம்மன்ஜாக்கி, மைவயல், களக்குடி. நாகுடி உடுமன்கொல்லை, எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் டந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலி குடங்களுடன் அறந்தாங்கி- கட்டுமாவடி சாலை நாகுடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் சி. கோகிலா பேச்சுவார்த்தை நடத்தி அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலருடன் தொலைபேசியில் பேசியதையடுத்து இப்பகுதிக்கு புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க பணிகள் நடைபெறுவதாகவும் அதுவரை ஊராட்சி நிர்வாகம் மூலம் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மறியலால் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.