ராமநாதபுரம் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?



இந்திய முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனிக்கு ரூ.32.47 கோடி சொத்து.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனி தனது வேட்பு மனுவுடன் சொத்து மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த உறுதிமொழி பத்திரத்தையும் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

அதில், அவர் தனக்கு அசையும் சொத்தாக ரூ. 6 கோடியே 95 லட்சத்து 27 ஆயிரத்து 958 உள்ளதாகவும், அதில் ரூ.55.33 லட்சம் மதிப்புள்ள 205 பவுன் நகைகள் உள்ளதாகவும், வங்கியில் வைப்புத் தொகையாக ரூ.72.71 லட்சம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அசையா சொத்தாக ரூ.20.67 கோடி உள்ளதாகவும், அதில்  வணிகக் கட்டடம் ரூ.1.34 கோடியும், வசிப்பிடக் கட்டடம் ரூ.3.50 கோடியும் அடக்கம். மொத்தத்தில் தனது சொத்து மதிப்பாக ரூ.32.47 கோடி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம், வங்கிக் கடனாக தனக்கு ரூ.1 கோடியே 99 லட்சத்து 34 ஆயிரத்து 718 உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி பெயரில் அசையும் சொத்து ரூ.49.97 லட்சமும், மகன் அப்சர் பெயரில் ரூ.52.87 லட்சமும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனைவி பெயரில் ரூ.46.19 லட்சம் மதிப்புள்ள 1,510 கிராம் நகைகளும், மகன் பெயரில் ரூ.44.23 லட்சம் மதிப்பில் 1,446 கிராம் நகைகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் வாகனங்களின் மதிப்பும் அடக்கம்.

வேட்பாளர் நவாஸ் கனி மீது கேணிக்கரை காவல் நிலையத்தில், தேர்தல் விதிமுறை மீறி அதிக வாகனங்களில் வந்ததாக வழக்குப் பதிவாகி இருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments