ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.94.81 கோடி என உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட, அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அப்போது, அவர் வேட்பு மனுவுடன் தனது சொத்து மதிப்பு மற்றும் குற்ற வழக்குகள் சம்பந்தமான உறுதிமொழிப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.
அவர் தனது கையிருப்பாக ரூ.10 லட்சம் உள்ளதாகவும், தனது பெயரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 150 பவுன் நகைகளும் மற்றும் தனது மனைவி கையிருப்பாக ரூ. 6 லட்சமும், ரூ. 70 லட்சம் மதிப்புள்ள 350 பவுன் நகைகளும் உள்ளதாகவும், குடும்பத்தில் தங்களைச் சார்ந்தவர் எனும் அடிப்படையில் ஒருவரது கையிருப்பு ரூ.50 ஆயிரம், 5 பவுன் நகைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அசையா சொத்துகளை சேர்த்து மொத்தம் தனக்கு ரூ. 94.81 கோடி சொத்து உள்ளதாகவும், தனது மனைவிக்கு மொத்தம் ரூ.7.31 கோடி சொத்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில், அவர் தனக்கு ரூ. 5.05 கோடியும், தனது மனைவிக்கு ரூ.2.99 கோடியும் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், தன் மீது எந்தவித வழக்கும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.