ராமநாதபுரம் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கணி நேற்று முன்தினம் அறந்தாங்கி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் தொகுதியில் திமுக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நவாஸ்கனி ஆர்.புதுப்பட்டிணம், மணமேல்குடி, ஆவுடையார் கோவில், அறந்தாங்கி தெற்கு, அறந்தாங்கி நகரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி, முன்னாள் எம்எல்ஏ உதய சண்முகம் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏரளமானோர் கலந்துகொண்டனர். காலை முதல் மாலை வரை கிராமம் கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
அப்போது நவாஸ்கனி பேசியதாவது:மத்தியில் மோடி தலைமையில் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி வரியால் தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். பாஜக ஆட்சியால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்கள் ஆக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்தியில் மோடி ஆட்சியை தூக்கி எறிய நீங்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். எனக்கு நீங்கள் ஏணி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைத்தால் அறந்தாங்கி பகுதியில் உள்ள விவசாயிகளின் துயரை துடைக்க பாடுபடுவேன். இதே போல் அறந்தாங்கி நகராட்சி பகுதியில் அனைத்துவிதமான அடிப்படை வசதிகளை நான் நிவர்த்தி செய்து தர பாடுபடுவேன் என்று பேசினார். இந்த பிரசாரத்தின்போது கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.