கோபாலப்பட்டினம் வாக்காளர்களுக்கு நவாஸ் கனி. MP அவர்கள் நன்றி தெரிவித்து வருகை!!!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மீமிசலை அடுத்த கோபாலப்பட்டினத்திற்கு 08/06/2019 அன்று மாலை 6.30 மணியளவில் கோபாலப்பட்டினம் மக்கா தெரு பெரிய பள்ளிவாசலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வெற்றி வேட்பாளர் கா.நவாஸ் கனி  அவர்கள் வருகை தந்தார்கள்.


பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தமைக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஊர் ஜமாத் தலைவர் அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார். அதனை தொடர்ந்து தோழமை கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் கோபாலப்பட்டினம் தமுமுக, GPM மக்கள் மேடை சார்பாகவும், கத்தார் தமுமுக சார்பாகவும்,  சால்வை அணிவித்தனர்.

மேலும் நவாஸ் கனி அவர்களுக்கு ஊர் ஜமாத் சார்பாக நமதூரில் பேரிடர் காலங்களில் தங்குவதற்கு கட்டிட வசதி செய்து தர வேண்டி மனுவும், கோபாலப்பட்டினம் தமுமுக சார்பாக இருபாலர் பயிலக்கூடிய அரசு மேல்நிலைப் பள்ளியை பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மனுவும் வழங்கப்பட்டது.

ஊரில் உள்ள அனைத்து இளைஞர்கள், பெரியோர்கள் மற்றும் தாய்மார்கள்  திரளாக வந்து நமது நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி அவர்ளை  வரவேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


























புகைப்படங்கள் உதவி : முஹம்மது ரிஸ்வான்

தகவல் &  GPM MEDIA செய்திகளுக்காக : காதர் பாட்சா

Post a Comment

0 Comments