R.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் பொதுக்குழு கூட்டம்



புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலை அடுத்த R. புதுப்பட்டிணத்தில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் பொதுக்குழு 06/06/2019 அன்று இஷா தொழுகைக்கு பிறகு அல் அமீன் தலைவர் M.ஜியாவுல் ஹக் தலைமையில் நடைபெற்றது.


கூட்டத்திற்கு நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை அல் அமீன் உறுப்பினர் சேக் கிராத் ஓதி துவங்கி வைத்தார். கூட்டத்தில் அல் அமீன் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து புதிய நிர்வாகம் தேர்வு செய்வது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தலைவர் ஜியாவுல் ஹக் தலைமையிலான நிர்வாகம் கலைக்கப்பட்டது.

புதிய நிர்வாகம் தேர்வு செய்வதற்கான நிர்வாகிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது.

புதிய தலைவராக A.கலந்தர் பாட்சா BE., புதிய செயலாளராக T.அப்துல்லாஹ் BE., புதிய பொருளாளராக S.வாசிர் கான் BE., ஆகியோர் ஒருமனதாக சபையினர் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 3 நிர்வாகிகளின் பரிந்துரையின் பெயரில் துணை தலைவராக S.அப்துல் முனாஃப் B.sc., துணை செயலாளர்களாக M.இனாமுல் ஹக் BE., நூர் முகம்மது மற்றும் முகம்மது முஸ்ஸம்மில் துணை பொருளாளராக M.அப்துல் ஸலாம் B.sc., மற்றும் மாணவர் அணி செயலாளராக S.முகமது முபாரக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.





இந்த பொதுக்குழு கூட்டத்தில் அல் அமீன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : சேக் அஜ்மல் கான்

Post a Comment

0 Comments