இனி ரூ.35 செலுத்த வேண்டாம் - ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்தது வோடஃபோன்



முன்னதாக 35 ரூபாய் ரீசார்ஜ் தொகைக்கு 30 நாட்களுக்கான வேலிடிட்டி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


வோடஃபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களது சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைத்துள்ள ஒரு குறைந்தபட்ச தொகையை ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். குறைந்தபட்ச தொகையாக வோடஃபோன் ஐடியா ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இந்தக் கட்டணத்தை 20 ரூபாய் ஆக வோடஃபோன் நிறுவனம் குறைத்துள்ளது. 20 ரூபாய் ரீசார்ஜ் என்பது 28 நாட்களுக்கான வேலிடிட்டி உடன் உள்ளது. முன்னதாக 35 ரூபாய் ரீசார்ஜ் தொகைக்கு 30 நாட்களுக்கான வேலிடிட்டி இருந்தது.

வாடிக்கையாளர்களின் கூடுதல் வசதிக்காகவும் போட்டியை சமாளிக்கவும் ஆண்டு சந்தா கட்டண முறையையும் வோடஃபோன் வழங்க உள்ளது. ஜியோ, ஏர்டெல் சலுகைகளால் வோடஃபோன் வாடிக்கையாளர்கள் பலரும் நெட்வொர்க் மாறுவது வோடஃபோனுக்கு பெரும் நஷ்டத்தை அளித்தது. இதை சமாளிக்கவே கட்டணத் தொகையை வோடஃபோன் குறைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments