புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் விளையாட்டு-பொழுதுபோக்கு மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்



பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மாவட்ட அளவில் குழந்தைகள் விளையாட்டு மற்றும் பொழுது போக்கு மையம் எனும் திட்டத்தினை தொடங்கி செயல்படுத்திட வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் நலனை மேம்படுத்தும் வகையில், குழந்தைகள் இல்லங்களில் தங்காமல் அதன் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் பொழுது போக்கு வசதிகளை ஏற்படுத்திட மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லங்களின் வளாகத்திலோ அல்லது தகுதி வாய்ந்த இடங்களிலோ குழந்தைகள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மைய திட்டத்தினை கீழே குறிப்பிடப்பட்டு உள்ள தகுதிகளை கொண்ட குழந்தைகள் இல்ல நிறுவனம் தனியாகவோ அல்லது தகுதி வாய்ந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்தோ செயல்படுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

குழந்தைகள் உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான பணிகளில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள நிறுவனம், NITI Ayog என்ற இணையத்தில் பதிவு பெற்ற நிறுவனம், வங்கி மற்றும் நிறுவனம் தொடர்பான அனைத்து பண பரிவர்த்தனை PFMS (ஆன்லைன்) முறையில் செயல்படுத்தும் நிறுவனம், நீதிமன்றத்தில் எந்தவிதமான குற்றவியல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இல்லாத நிறுவனம், திட்டத்தினை செயல்படுவதற்கு நிதி நிலையில் தன்னிறைவு பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவத்தை புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து பெற்று கொள்ளலாம். அல்லது www.pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் செய்தி வெளியீடு நாளில் இருந்து 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, முன்னாள் படை வீரர்கள் நல மைய வளாகம், கல்யாணராமபுரம் முதல் வீதி, திருக்கோகர்ணம் என்ற முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04322216266 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments