புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவித்தொகையுடன் வாகனப் பழுது நீக்கும் பயிற்சி



புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிறுவனம் மூலம் அம்மா இருசக்கர வாகனப் பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு தொடா்பான குறுகிய காலப் பகுதி நேரப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் அம்மா இரு சக்கர வாகன பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு சம்பந்தமான குறுகிய கால பகுதி நேரப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

5ஆம் வகுப்பு தோ்ச்சியடைந்த, 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவா்கள் இதில் பங்கேற்கலாம். பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை பயிற்சி வழங்கப்படும். 

நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் உதவித் தொகை வழங்கப்படும். மேலும் பயிற்சியை நிறைவு செய்வோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். 

இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் தங்களது அசல் கல்விச் சான்று, சாதிச் சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டையின் அசல் மற்றும் மூன்று புகைப்படங்கள் கொண்டு வர வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.12.2019

மேலும், இச்சான்றுகளின் இரு நகல்களுடன்

அரசுத் தொழிற் பயிற்சி நிலையம், 
திருக்கோகா்ணம், 
புதுக்கோட்டை .

என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments