கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடையின் 5-வது ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்வு..!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் சமூகநல அமைப்பான GPM மக்கள் மேடையின் 5-வது ஆலோசனை குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.

GPM மக்கள் மேடை என்ற சமூக அமைப்பு கோபாலப்பட்டிணம் மக்களுக்கு பயன் தரும் வகையில் பல்வேறு பொது சேவைகளை செய்து வருகிறது. இதற்கு முன்பு நான்கு ஆலோசனை குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு பல லட்சம் மதிப்பிலான திட்டமான மையவாடி சுற்று சுவர் அமைப்பு, குறைந்த விலையில் குடி தண்ணீர் விநியோகம் மற்றும் ஆம்புலன்ஸ் (AMBULANCE) அர்ப்பணிப்பு போன்றவை நிறைவேற்றினர்.

200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட இந்த மக்கள் மேடையில் பல நலத்திட்டங்கள் மற்றும் மாதாந்திர வரவு செலவுகளை நிர்வகிக்க ஏழு
பேர் கொண்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகிறார்கள்.  இந்த ஏழு பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில் உள்நாட்டில் உள்ள இரண்டு பேர் நிரந்தர ஆலோசனை உறுப்பினர்களாக உள்ளனர். மற்ற ஐந்து நபர்களில் இரண்டு நபர்கள் வெளிநாட்டில் வசிப்பவராகவும், மற்ற மூன்று நபர்கள் உள்நாட்டில் வசிப்பவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆலோசனை குழுவின் நிர்வாக காலம் ஒரு ஆண்டு ஆகும்.

அதனடிப்படையில் 2020-ஆம் ஆண்டிற்க்கான ஆலோசனை குழு தேர்வு செய்வதற்காக கடந்த 8.12.2019 அன்று மக்கள் மேடை உறுப்பினர்கள் விருப்பம் தெரிவிக்க வேண்டி அறிவிப்பு செய்யப்பட்டது. பிறகு 13.12.2019 அன்று விருப்பம் இல்லாதவர்கள் வாபஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் உள்நாட்டில் இருந்து ஆலோசனை உறுப்பினர்களாக செயல்பட மூன்று நபர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்த நிலையில் போட்டியின்றி தேர்வு என அறிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டில் இருந்து ஆலோசனை குழு உறுப்பினர்களாக செயல்பட நான்கு நபர்கள் விருப்பம் தெரிவித்தநிலையில் இரண்டு நபர்களை தேர்வு செய்ய ஆன்லைன் வாக்குப்பதிவு கடந்த 14.12.2019 முதல் 17.12.2019 வரை மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் விபரம்,

பதிவான வாக்குகள்: 120
செல்லாத வாக்குகள்: 1

3. அஜ்மீர் கான் S/O இஸ்மாயில் - 90
4. சித்திக் ரஹ்மான் S/O அப்துல் காதர் - 77
1. ஜகுபர்அலி S/O நெய்னா முஹம்மது - 48
2. மக்கத் தம்பி S/O அப்பாஸ் - 23

இதில் அஜ்மீர் கான் S/O இஸ்மாயில் மற்றும் சித்திக் ரஹ்மான் S/O அப்துல் காதர்  ஆகியோர் வெற்றி பெற்றனர். இவ்வாறாக உள்நாட்டு ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஐந்து நபர்களும், வெளிநாட்டு ஆலோசனை உறுப்பினர்கள் இரண்டு நபர்களும் என மொத்தம் ஏழு நபர்கள் 2020-ஆம் ஆண்டுக்கான ஆலோசனை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

2020-ஆம் ஆண்டுக்கான ஆலோசனை குழு உறுப்பினர்கள் விபரம்,


1. அலி அக்பர் S/o அகமது கபீர்,
(கோபாலப்பட்டிணம்)

2. முஹம்மது முனோபர் S/o சேக் நூர்தீன்,
(குடவாசல்)

3.முஹம்மது யூசுப் S/o செய்து முகம்மது புகாரி,
(கோபாலப்பட்டிணம்)

4.அகமது உமர் S/o அப்துல் அஜீஸ்,
(கோபாலப்பட்டிணம்)

5.முஹம்மது யாசின் S/o சுபைர் அமீர்,
(கோபாலப்பட்டிணம்)

6.அஜிமீர் கான் S/o முஹம்மது இஸ்மாயில்,
(தம்மாம், சவூதி அரேபியா)

7.சித்திக் ரஹ்மான் S/o அப்துல் காதர் ,
(தம்மாம், சவூதி அரேபியா)

இந்த காலத்தில் நன்கொடை வழங்க ஏராளமான தனவந்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் நேரம் ஒதுக்கி களப்பணி செய்ய ஒரு சிலரே முன்வருகிறார்கள். அதனடிப்படையில் 2020-ஆம் ஆண்டிற்க்கான ஆலோசனை குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட GPM மக்கள் மேடை உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் GPM மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்: ஆலோசனை குழு 4, GPM மக்கள் மேடை, கோபாலப்பட்டிணம்.

தொகுப்பு: GPM மீடியா அட்மின் குழு
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments