வேலை... வேலை... வேலை... ஓமன் நாட்டில் எலக்ட்ரீசியன் வேலை.!ஓமன் நாட்டில் பணிபுரிய விருப்புமுள்ள ஐடிஐ, எலக்ட்ரீசியன் படிப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது

ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய 25 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட ஐடிஐ,  எலக்ட்ரிசியன் தோ்ச்சியுடன் டிரான்ஸ்மிஷன், டிஸ்ட்ரிபியூஷன், டவா் மெயின்டனன்ஸ் போன்ற பிரிவுகளில் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவா்கள் தேவைப்படுவதாக இந்திய அரசின் அயல்நாட்டு மனிதவளக் கழகம் தெரிவித்துள்ளது.

தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு ரூ.33 ஆயிரம் முதல் பணி அனுபவத்துக்கேற்ப ஊதியம் வழங்குவதுடன் விசா மற்றும் ஓமன்  நாட்டின் சட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.

எனவே, விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை கல்வி, கடவுச்சீட்டு ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு  புகைப்படத்துடன் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களை 044-2250 5886, 82206 34389 ஆகிய எண்களில் அறியலாம்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments