என்றென்றும் மனிதநேய பணியில் தமுமுக



மனிதநேய பணியில்  தமுமுக

சவுதி அரேபியாவில் இறந்த உடலை தாயகம் அனுப்பிய ரியாத் தமுமுக

தமிழகத்தை சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா  திருச்சிற்றம்பலம் மேற்கு, பொக்கன்விடுதி கிராமத்தை சேர்ந்த முருகன் அவர்களின் மகன் ராமநாதன் அவர்கள் Saleh Hussain Salem Al Salamah என்ற தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 03-02-2020 அன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும்,ராஜ்குமார்என்ற மகனும்,தமிழ்செல்வி என்ற மகளும் உள்ளார்கள்.

இச்செய்தியை அறிந்த உறவினர்கள் செய்வதறியாத நிலையில் தமுமுக முன்னால் மண்டல தனிச்செயலாளர்  ஆசிக் இக்பால் மற்றும் புருனை ஜபருல்லாஹ் மற்றும் அமீரக தலைவர் அதிரை அப்துல்ஹாதி அவர்களும் ரியாத் மண்டல சமூகநலத்துறையின் உதவியை நாடினர்.

தகவலைப்பெற்ற ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் அப்துல்ஹமீது அவர்கள் ரியாத் மத்திய மண்டல தமுமுக-மமக தலைவர் மீமிசல் நூர்முகம்மது அவர்களின் வழிகாட்டுதலின்படி ராமநாதனுடன் பணியாற்றிய மதுசூதனுடன் இனைந்து மருத்துவமனையிலிருந்து உடலை வாங்க தேவையான ஆவணங்களை தயார் செய்தார்

விரைந்து செயல்பட்டாலும் கம்பெனியிலிருந்து பெறவேண்டிய தொகை மற்றும் உடலை அனுப்புவதற்கான தொகைக்கான கையொப்பமிடலில் தாமதம் ஏற்பட்டது.
கம்பெனி முதலாளியை நேரில் சந்தித்து பிரச்சினைகளை தெளிவாக்கி கையொப்பம் பெற்று,
உரிய ஆவணங்களை இந்திய தூதரக ஒத்துழைப்புடன் மருத்துவமனையில் ஒப்படைத்து ராமநாதனின் உடல் பெற்று கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 13-02-2020 வியாழக்கிழமை  மாலை 10:30மணியளவில் ஶ்ரீலங்கன் விமானம் மூலமாக ராமநாதன் உடல் திருச்சி விமான நிலையம் 14-02-2020 காலை சென்றடைந்தது.திருச்சி தமுமுக நிர்வாகிகள் உடலைப்பெற்று அங்கிருந்து அதிராம்பட்டினம் ஆம்புலன்ஸ் மூலமாக அவரது ஊரைச்சார்ந்த நரியங்காடு இப்ராஹிம்ஷா,ஓட்டுனர் கனி மற்றும் தஞ்சை தெற்கு-அதிரை நிர்வாகிகள் மற்றும் திருச்சி-தெற்கு நிர்வாகிகள் இணைந்து ராமநாதன் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.




அதுமட்டுமில்லாமல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று இடுகாடு வரை உடனிருந்து உதவி செய்தனர்.
மனிதநேய மிக்க இப்பணியை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உரிய நேரத்தில் ராமநாதன் உடலை எங்களிடம் ஒப்படைத்தீர்கள் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றி கூறினார்.

என்றென்றும் மனிதநேய பணியில் ;

தமிழ் தஃவா தமுமுக - மமக
சமூக நலத்துறை 
மத்திய மண்டலம் 
ரியாத் - சவுதி அரேபியா
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments