இறுதி பட்டியல் வெளியீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,15,498 வாக்காளர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு மொத்தம் 37,471 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 571 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் முடிந்த பிறகு 2020க்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி இதனை வெளியிட்டார். இதன்படி மாவட்டத்திலுள்ள வாக்காளர் மற்றும் வாக்குச்சாவடிகள் விவரம்
2020ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,51,682 ஆண் வாக்காளர்களும், 6,63,731 பெண் வாக்காளர்களும், 85 திருநங்கைகளும் என மொத்தம் 13,15,498 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் மொத்தம் 12,78,598 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தில் 17,118 ஆண் வாக்காளர்கள், 20,316 பெண் வாக்காளர்கள் மற்றும் 37 திருநங்கைகள் என மொத்தம் 37,471 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல சுருக்கமுறைத் திருத்தத்தில் 260 ஆண் வாக்காளர்கள், 311 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 571 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகள் விவரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,537 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் 85 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் 824 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 909 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.
புதிய இளம் வாக்காளர்கள்
18 வயது நிறைவடைந்த புதிய இளம் வாக்காளர்களாக 5,239 ஆண் வாக்காளர்கள், 4,123 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 திருநங்கைகள் என மொத்தம் 9,367 வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் எம்.எஸ். தண்டாயுதபாணி, டெய்சிகுமார், குணசேகர், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியர் கிருஷ்ணன், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.