மேலும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிலும் பல இடங்களில் காய்கறி, மளிகைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை புகார்களாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக விலைக்கு காய்கறிகள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை நகர மக்களுக்கு காய்கறிகள் அவர்களின் வீடுகளுக்கே கிடைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை புதுக்கோட்டை நகரில் உள்ள மக்களுக்கு வீடு தேடி சென்று வழங்கும் திட்டத்தின் கீழ் wa.me/919443675038 என்ற எண்ணில் முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பினால் அவர்களின் வீட்டுக்கே கூட்டுறவு சங்க ஊழியர்கள் காய்கறிகளை கொடுத்துவிட்டு பணம் வாங்கிச் செல்வார்கள்.
அதாவது ரூ. 150 மதிப்புள்ள காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ. 100 க்கும் ரூ. 200 மதிப்புள்ள காய்கறித் தொகுப்பு ரூ. 150 க்கும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் நேரிலும் சென்று ஆய்வு செய்தார்.
இதே போல கிராமங்களில் உள்ள விவசாயிகளின் காய்கறிகளை அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து வீட்டுக்கு வீடு காய்கறிகள் விற்பனை செய்தால் மாவட்டம் முழுவதும் காய்கறிக்காக வீட்டைவிட்டு வெளியே வருவோர் எண்ணிக்கை குறையும் என்று கூறும் விவசாயிகள், இதே போல வாழைப் பழங்கள், பலாப் பழங்கள் உள்ளிட்ட பழங்களையும் கொள்முதல் செய்து விற்பனை செய்தால் விவசாயிகள் நட்டமின்றி வாழலாம் என்கின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.