கோபாலப்பட்டிணம் TNTJ கிளை சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு பொருட்கள் விநியோகம்.! (படங்கள்)கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டிணம் கிளை சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டிணம் கிளை சார்பாக #Covid19  #144  தடை உத்தரவு காரணமாக வேலைக்கு போகமுடியாமல் அன்றாடம் உணவுக்கு கஷ்டப்படும் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நேற்று 08.04.2020 புதன்கிழமை  8 குடும்பங்களுக்கு  வழங்கப்பட்டது.

இந்த பணியை கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சகோதரர்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்தனர்.

இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவதே - நபி (ஸல்)

இதற்காக பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் இறைவன் அருள்புரிவானாக...

என்றும் சமுதாய மற்றும் மார்க்க பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
கோபாலப்பட்டிணம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.
9715503699
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments