புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 11, 12-ந்தேதிகளில் இறைச்சி கடைகள் மூட கலெக்டர் உத்தரவு.!புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தூய்மைப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 11, 12-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மீன், கோழி, ஆடு உள்ளிட்ட அனைத்து இறைச்சி விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments