புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.
✴️அதே போல் நமது அருகாமையில் உள்ள சுற்றுவட்டார பகுதி ஊர்களில் கொரோனா வைரஸ் பரவி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
✴️ஆகையால் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் முடிந்தளவு வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.
✴️அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும்போது உங்கள் குழந்தைகள் நலனுக்காகவும், உங்கள் குடும்பம் நலனுக்காகவும், உங்கள் ஊர் நலனுக்காகவும், உங்கள் ஊரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.
✴️தயவு செய்து அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
✴️வெளியே சென்று வீட்டிற்குள் நுழையும் முன் கைகளை நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள்.
✴️மருத்துவ தேவைகளுக்காக வெளியூர் செல்லும்போது பொது மக்கள் தயவு செய்து முக கவசம் அணிந்தும் மற்றும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டுகிறோம்.
✴️அரசு சொல்லிருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் நமது குடும்பத்தையும், உறவினர்களையும் நமது ஊரையும் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
✴️எனவே மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை GPM மீடியா வாசகர்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடித்து கொரோனா பாதிப்பில் இருந்து அனைவரும் பாதுகாத்து கொள்ளும்படி GPM மீடியா சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டில் இரு,
விழித்து இரு,
தனித்து இரு,
அன்புடன்....
GPM மீடியா குழு,
GOPALAPPATTINAM
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.