கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் கடற்கரை பகுதியில் வலை பின்னும் கூடம் கட்டுமான பணி நிறைவுபெற்று மீனவர்களின் பயன்பாட்டிற்கு வந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு மற்றும் பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதியம் உதவியுடன் கூடிய சுனாமிக்குப்பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் மீன் வலை பின்னும் கூடம் சுமார் ரூ.12.60 லட்சம் செலவில் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கட்டுமானப்பணி நிறைவடைந்த நிலையில் தற்பொழுது மீன் வலை பின்னும் கூடம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பு: மீன் வலை பின்னும் கூடத்தை பொறுத்தவரையில் அரசு மற்றும் தனியார்துறை இணைந்து கட்டிக்கொடுத்துள்ளது. எனவே இந்த கட்டிடத்தை எந்தவித சேதப்படுத்தாமலும் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபதடவாறு பார்த்து கொள்வது நமது கடமை. மேலும் குறிப்பாக வலை பின்னும் மீனவர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாதவாறு அங்கு செல்லக்கூடியவர்கள் நடந்துகொள்ள வேண்டுமாய் மீனவர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.