கொரோனா தொற்றால் இறந்த பாஜக பிரமுகரின் உறவினரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக-மமக வினரின் மனிதநேய பணி.!



தஞ்சை பாஜக மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோவின் மாமாவும் பண்ணவயல் சாமியப்பா சவுன்ட் சர்வீஸ் உரிமையாளருமான கருணாநிதி அவர்கள் கொரோனா தொற்றால் தஞ்சையில் மரணமடைந்தார்.


கருணாநிதி அவர்களின் உறவினர்களும்,மருத்துவமனை நிர்வாகமும் அவரது உடலை நல்லடக்கம் செய்து கொடுக்குமாறு மமக அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.உடனடியாக அவசர ஊர்த்தியுடன் மருத்துவமனைக்கு விரைந்த தமுமுக-மமக வினர் மதுக்கூர் தமுமுக-மமக தன்னார்வலர்களிற்கு பண்ணவயலில் அடக்கம் செய்ய வேண்டும் என தகவலளித்துவிட்டு இறந்தவரின் உடலை பேக் செய்து ஆம்புலன்ஸ் வாயிலாக பண்ணவயலுக்கு எடுத்து செல்லப்பட்டது.


பண்ணவயலில் உடலை பெற்ற மதுக்கூர் தமுமுக-மமக வினர் உடலை நல்லடக்கம் செய்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments