ரியாத் மத்திய மண்டல தமுமுக மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி இணைந்து நடத்திய இரத்ததான முகாம்.!



சவுதி அரேபியாவின் தற்போதைய சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி இரத்த வங்கி கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - ரியாத் மத்திய மண்டலம்


மற்றும் கிங் பஹத் மெடிக்கல் சிட்டி இரத்த வங்கி இணைந்து நடத்திய அவசர கால இரத்ததான முகாம் 17/07/2020, வெள்ளிக்கிழமை அன்று கிங் பஹத் மெடிக்கல் சிட்டி இரத்த வங்கியில் காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமிற்கு மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் தலைமை தாங்க , மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகிக்க,  ரியாத் மண்டல மருத்துவரணி செயலாளர் மங்களகுடி தாஹா ரசூல் அவர்களும் இரத்த வங்கி பொறுப்பாளருமான மண்டல சமூக நலத்துறை துணைச் செயலாளர் அறந்தை சித்திக் அவர்களும் மண்டல நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.


இந்த இரத்ததான முகாமில் 2 பெண்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் பங்கேற்று தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர். இந்த இரத்ததான முகாமிற்கு காலை 8 மணிக்கெல்லாம் சுவைதி கிளை தலைவர் சகோ.இஸ்மாயில் அவர்களின் தலைமையில் பல சகோதரர்களும் , அதே போன்று திரையா கிளை செயலாளர் நூர் முஹம்மது அவர்களின் தலைமையிலும் பெருந்திரளான சகோதரர்களும் இரத்ததானம் வழங்க முன்வந்தனர்.  மேலும் இரத்ததானம் வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் ரியாத் மத்திய மண்டலம் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இரத்ததான கொடையாளர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும், இரத்தவங்கி ஊழியர்களுக்கும் காலை மற்றும் மதிய உணவு, தேநீர், பழச்சாறு, தண்ணீர் மற்றும் பாதுகாப்பு முக கவசம் போன்றவைகளை முகாமின் களப்பணியாளர்களான ஷாக்கிர் பேக், நிஜாமுதீன், தாஜ்தீன், அப்துர் ரஹீம், முபீன் அஹமது,  ஜர்ஜீஸ் அஹமது, அப்துல்லா, பீர் முஹம்மது, தெளபிக், ஹஜ் முஹம்மது ஆகியோர் சிறப்பாக விநியோகம் செய்தனர்.


இந்த இரத்ததான முகாமிற்காக மண்டல - கிளை நிர்வாகிகள் யாரையும் நேரடியாக சென்று சந்தித்து அழைப்பு பணி செய்ய முடியாத சூழ்நிலையிலும் தொலைப்பேசி வாயிலாக மிக சிறப்பான முறையில் மண்டல மமக துணைச் செயலாளர் நல்லூர் மசூது ஜின்னா அவர்களின் தலைமையில் அழைப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த இரத்ததான முகாமை ஒருங்கிணைத்த சகோதரர்களுக்கும், முகாமிற்கான உணவு மற்றும் வாகன ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கும், பொருளாதார உதவி அளித்த சகோதரர்களுக்கும், பல கிளைகளிலிருந்து இரத்த வங்கிக்கு வருகை புரிந்த சகோதரர்களுக்கும், களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும்,  ஊடக ரீதியாக உதவி செய்த ரியாத் மண்டல ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் கோபாலப்பட்டிணம் முகமது ரிஸ்வான் மற்றும் வருகை பதிவேடு பணியை சிறப்பாக முன்னெடுத்து செய்த முன்னாள் மண்டல செயற்குழு உறுப்பினர் ஆசிக் இக்பால் மற்றும் மண்டல உறுப்பினர் சபீர் அலி அவர்களுக்கும், முகாமிற்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய மண்டல - கிளை நிர்வாகிகளுக்கும் ரியாத் மத்திய மண்டலம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இது போன்று ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

இறுதியாக இரத்த வங்கி ஊழியர்களின் ஒத்துழைப்பை பெருமைபடுத்தும் விதமாக இரத்தவங்கி ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க, துவாவுடன் முகாம் இனிதே நிறைவடைந்தது.

தகவல்
தமிழ் தஃவா தமுமுக - மமக 
ஊடகப்பிரிவு 
மத்திய மண்டலம் 
ரியாத் - சவூதி அரேபியா
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments