புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற நவ-19, நவ-20 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது: 

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவில் உள்ள மதர்தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி-யில் வருகிற 19.11.2020 (வியாழக்கிழமை) மற்றும் 20.11.2020 (வெள்ளிக்கிழமை) இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. 

மேலும் இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். உயர்கல்வி, சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் குறித்து சம்மந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து வழிகாட்டவுள்ளனர். 

இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ வரை கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் வேலைநாடும்  இளைஞர்கள் 'தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்' (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments