இந்திய அளவில் முதல் பரிசை வெற்றி பெற்ற தொண்டி புறா
திருவாடனை: திருவாடானை அருகே தொண்டி ரேசிங் ஹோம்கோ் கிளப் சாா்பில் புறா பந்தையம் நடைபெற்றது. இதில் தொண்டியை சோ்ந்த புறா 8 மணி நேரத்தில் நெல்லூரில் இருந்து தொண்டடிக்கு பறந்து வந்து ஒட்டு மொத்த சாமிபியன் பட்டத்தை வென்றது.

திருவாடானை அருகே தொண்டியில் பந்தய புறாக்களை வைத்து பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் தொண்டி ரேசிங் ஹோம்கோ் கிளப் சாா்பில் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறாக்களைப் பறக்க விட்டு தொண்டி வந்தடையும் நேரத்தை கணக்கிட்டு பரிசுகள் வழங்குவது உண்டு. அதேபோல் சனிக்கிழமை நடைபெற்ற புறா பந்தயத்தில் தொண்டியை சேர்ந்த புறா முதல் பரிசை தட்டிச் சென்றது.


ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியிலிருந்து கடந்த (07-11-2020)சனிக்கிழமை மாலை பறக்கவிடப்பட்ட தொண்டியை சேர்ந்த ஜியா உல் ஹக் என்பவரது பந்தய புறா சுமார் 550 கிலோ மீட்டர் தொலைவை சுமார் 8 மணி நேரத்தில் கடந்து தொண்டி வந்தடைந்தது. 

அதேபோல் விழுப்புரத்திலிருந்து 5  மணி நேரத்தில் வந்தடைந்தது அதேபோல் சென்னையில் இருந்து 10 மணி நேரத்தில் தொண்டிக்கு வந்தடைந்தது. நெல்லூரில் இருந்து தொண்டிக்கு 8 மணி நேரத்தில் வந்தடைந்த புறா உரிமையாளர் ஜியாவுல் ஹக் என்பவருக்கு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் கோப்பையும் ஞாயிற்றுக்கிழமை ரேசிங் ஹோம் ஹேர் கிளப் அங்கத்தினர்கள் வழங்கினார்கள். இதில் சென்னை, காரைக்குடி, புதுகோட்டை பகுதியை சேர்ந்த பந்தய புறா வளர்ப்போர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments