கோபாலப்பட்டிணம் பெண்கள் தையல் பயிற்சி பெற ஓர் அரிய வாய்ப்பு.! GPM பைத்துல்மால் ஏற்பாடு.!!



கோபாலப்பட்டிணத்தில் இயங்கி வரும் GPM பைத்துல்மால் நமதூர் மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகின்றது. அந்த வகையில் கோபாலப்பட்டிணம் பெண்கள் சுய தொழிலை கற்றுக் கொள்ளும் நோக்கில் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்க GPM பைத்துல்மால் ஏற்பாடு செய்திருக்கிறது.

எனவே இந்த அரிய வாய்ப்பினை கோபாலப்பட்டிணம் பெண்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு GPM மீடியா சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

இரண்டு மாத காலம் தையல் பயிற்சி வகுப்பு நடைபெறும். மாதக்கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படும். 

தையல் பயிற்சி கற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப படிவம் கோபாலப்பட்டிணத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கும். 

பெயர், கணவர் பெயர், தந்தையின் பெயர், தாயார் பெயர், முகவரி, வயது, செல் நம்பர், புகைப்படம் மற்றும் முகவரி போன்ற விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து கோபாலப்பட்டிணம் நைனா சாச்சா கடையின் முகப்பில் இதற்காக  வைக்கப்பட்டிருக்கும்  பெட்டியில் போடவும்.

நிபந்தனைகள்: 

1. பத்து வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்த பயிற்சி வகுப்பில் பயில விண்ணப்பிக்கலாம்.

2.தையலுக்குத் தேவையான ஊசி, நூல், கத்தரிக்கோல், துணிகள் மற்றும் இதர பொருட்களை உங்களின் சொந்த பொறுப்பில் வாங்கி வரவேண்டும். 

3.உங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிய நேரத்தில் தவறாமல் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தினால் பயிற்சிக்கு வர முடியவில்லையென்றால் பொறுப்பாளரிடம் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். 

4.ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை என இரு பிரிவாக பயிற்சி வகுப்பு நடைபெறும்.

5.காலை நேர (10-12) வகுப்பில்  20 நபர்களும் மற்றும் மாலை நேர (2-4) வகுப்பில் 20 நபர்கள் என இரண்டு மாதத்திற்கு நடைபெறும்.

6.அதிகமான விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் பயிற்சி வகுப்பில் சேர குழுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 

7.இன்ஷா அல்லாஹ் தையல் பயிற்சியின் காலம் இரண்டு மாதங்கள் ஆகும். 

8.தையல் பயிற்சிக்கு வரும்போதும், பயிற்சி முடித்து செல்லும் போதும் வருகை பதிவேட்டில் அவசியம் கையெழுத்திட வேண்டும். 

9.இந்ததையல் பயிற்சி வகுப்பானது கோபாலபட்டிணத்தை சேர்ந்த மகளிருக்கு மட்டும். 

மேலும் தொடர்புக்கு: 
GPM பைத்துல்மால் நிர்வாகிகள்,கோபாலப்பட்டிணம். 
81899 63755
87784 98599
97870 03539



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments