கோட்டைப்பட்டிணத்தில் நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் 70-வது பொதுக்குழு கூட்டம்.!!புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் 70-வது பொதுக்குழு கூட்டம் கடந்த 17.11.2020 அன்று கோட்டைப்பட்டிணத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் முஹ்யித்தீன் ஆண்டகை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் புதுக்கோட்டை மாவட்ட உலமா சபையின் 70-வது பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மௌலவி,அல்ஹாஜ் S.லதக்கத்துல்லாஹ் உலவி ஹழ்ரத், புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அவர்கள் தலைமையில் மௌலவி, ஹாபிழ் H.அப்துல் ஹக் அன்வாரி ஹழ்ரத் அவர்கள் கிராஅத் ஓதிய பின்பு, மௌலவி,ஹாபிழ் S.A.ஜாஃபர் அலி உலவி ஹழ்ரத் அவர்கள் வரவேற்புரையாற்ற இனிதே துவங்கி நடைபெற்றது.

இறுதியாக பொதுக்கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.மாவட்டம் தழுவிய மீலாது விழா&சமய நல்லிணக்க விழா கடற்கரை வட்டாரத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

2.மாவட்ட நிர்வாகிகள் மீண்டும் மூன்று வருடங்களுக்குப் பொறுப்பு வகிப்பதாக மாவட்ட உலமா பெருமக்களால் முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இமாம்கள் கலந்து கொண்டனர்.   


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments