ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு..!
ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளை டிச.7 முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரத் தொடங்கினர். இதனிடையே சென்னை ஐஐடிவளாக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டு, பிஇ உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட்டன. நடப்பு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் மாணவர்களுக்கு தற்போது ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நடப்பு செமஸ்டர் தேர்வு ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுக்கான தேதி அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments