மீமிசலில் டிச.26-ல் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பெட்டி படுக்கையுடன் டெல்லிக்கு புறப்படும் போராட்டத்திற்கு அழைப்பு.!
மீமிசலில் டிசம்பர்26ல் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பெட்டி படுக்கையுடன் டெல்லிக்கு புறப்படும் போராட்டம்.
மத்திய அரசின் புதிய 3 வேளான் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடக்கூடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து
மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் சார்பில் பெட்டி படுக்கையுடன் டெல்லிக்கு புறப்படும் போராட்டம் 26.12.2020 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு  மீமிசல் கடைவீதியில் நடைபெற உள்ளது.

மாவட்ட துணை செயலாளர் செய்யது அபுதாஹிர் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில்  விவசாய அணி மாநில செயலாளர் பேரை அப்துல் சலாம், மாநில துணை செயலாளர் துரை முகம்மது, மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் ஆகியோர் கண்டன உரையாற்ற உள்ளனர்.

விவசாயம் காக்க அனைவரும் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

அழைப்பது..

மனிதநேய ஜனநாயக கட்சி
ஆவுடையார் கோவில் ஒன்றியம் 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments