கோபாலப்பட்டிணத்தில் வீடு, வீடாக டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை நாளொன்றுக்கு 225 அட்டைகளுக்கு மிகாமல் வாடிக்கையாளர் வாங்கிக்கொள்வதற்கு ஏதுவாக டோக்கன் வழங்கப்பட வேண்டும். அந்த டோக்கனில் ரேஷன் பொருட்களை அவர்கள் பெறும் நாள், நேரம் குறிப்பிடப்பட வேண்டும்.
இந்த டோக்கனை 29, 30 மற்றும் டிசம்பர் 1-ந் தேதிகளில் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்க வேண்டும். டிசம்பர் 2, 3 மற்றும் 5-ந் தேதிகளில் பி.எச்.எச். மற்றும் ஏ.ஏ.ஒய். ரேஷன் அட்டைதாரர்களும், 7, 8, 9 மற்றும் 10-ந் தேதிகளில் என்.பி.எச்.எச். அட்டைதாரர்களும் பொருட்களைப் பெற ஏதுவாக டோக்கன் வழங்கப்பட வேண்டும்.
டோக்கனில் குறிக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே, குடும்பத்திற்கு ஒருவர் வந்து பொருட்களை பெற முடியும் என்பதை அட்டைதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதை போலீசார் மூலம் ஒலிபெருக்கி வழியாக கூற வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குடும்பத்திற்கு பொருள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
டிசம்பர் 2-ந் தேதியில் இருந்து பொருள் வினியோகம் ஒரே தவணையில் செய்யப்பட வேண்டும். பி.எச்.எச். மற்றும் ஏ.ஏ.ஒய். ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்புக்கு பதிலாக 5 கிலோ முழு கொண்டை கடலையுடன் மற்ற பொருட்களை வழங்க வேண்டும்.
என்.பி.எச்.எச். அட்டைதாரர்களுக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒரு கிலோ துவரம் பருப்பை விலையின்றியும், மற்ற பொருட்களை வழக்கம்போலவும் வழங்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள், மிக வயதானவர்கள், நேரில் வர முடியாதவர்களுக்கு வீடுகளுக்கு சென்று பொருள் வழங்க வேண்டும். கடைகளுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ரேஷன் அட்டைகளின் வகை பாகுபாடின்றி அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தலா 2 முக கவசங்களை வழங்க வேண்டும். கொடுக்காமல் விடுபட்டவர்களுக்கும் இம்மாதமே கொடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், உணவுத்துறை அதிகாரிகளுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
அதனடிப்படையில் நேற்று நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கனை ரேஷன் கடை ஊழியர் கணேசன் மற்றும் 7-வது வார்டு உறுப்பினர் சாதிக் பாட்சா ஒவ்வொரு வீடாக சென்று வழங்கினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.