‘புரெவி' புயல் எதிரொலி: இன்று நடைபெறவேண்டிய மீமிசல் வராசந்தை வருகிற டிச-5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!மீமிசலில் இன்று நடைபெற வேண்டிய வாரச் சந்தை ‘புரெவி' புயல் எதிரொலி காரணமாக வருகிற டிச-5 -ஆம் தேதி நடைபெறும் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

மீமிசலில் புதன்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ‘புரெவி' புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், இன்று 02.12.2020 புதன்கிழமை நடைபெற வேண்டிய வாரச்சந்தை வருகிற டிச.5-ஆம் தேதி நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். 

எனவே பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments