வரலாறு காணாத அளவிற்கு
காட்டுகுளம் நெடுங்குளம் முழு கொள்ளளவை எட்டிவிட்டது
கடந்த சில மாதமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோபாலப்பட்டிணத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக (2015-2018) போதிய மழை இல்லாமல், குளங்களில் உள்ள நீர் மாசடைந்து வற்றிய நிலையில் காணப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டு (2019) நல்ல பெய்தது குளங்கள் நிரம்பியது
கோபாலப்பட்டிணத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கன மழையால், மக்கள் பயன்பாட்டுக்குரிய காட்டுகுளம் ,நெடுங்குளம் வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டிவிட்டது
குளிக்க வரும் மக்கள், குளத்துக்கரையில் நின்று புகைப்படம் எடுத்தும், குளத்தில் நீராடியும், நீச்சல் அடித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
காட்டுக்குளம் ,நெடுங்குளம் பல ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளவை எட்டியுள்ளது மட்டுமல்லாது முன்னர் வற்றி கிடந்த குளம் இப்பொழுது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இதனால் வெளிநாட்டில் குழாய் தண்ணீரில் குளித்து வரும் கோபாலப்பட்டிணம் உறவுகள் நாம் எப்பொழுது ஊருக்கு வந்து இந்த குளத்தில் நீச்சலடித்து குளிக்க போகிறோம் என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.
தொடர் மழையால் குளங்கள் நிரம்பி இருப்பது கோபாலப்பட்டிணம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.