பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடத்துவது எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்




தேர்தல் தேதி முடிவுக்கு பின்னரே பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் ஏழூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 98 சதவீத மாணவர்களின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்தே பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

முதல் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளன.சூழ்நிலைக்கேற்ப மற்ற வகுப்புகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 6,029 பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. மாணவர்களுக்கு எந்தெந்த பாடத்திட்டங்கள் நடத்துவது என்பது குறித்த அட்டவணையையும் அரசு வெளியிட்டுள்ளது.

தேர்தல் தேதி முடிவுக்கு பின்னர் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். தனியார் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியதாக புகார் வந்தால், அந்தந்த பள்ளிகளிடம் அதுகுறித்து கேட்கப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments