புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 24-ந் தேதி முதலே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
தடை காலத்திற்கு முன்பே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படாததால் தடை காலத்தை குறைத்து, வருகிற 1-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் மீன்களை வாங்க பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனத்தினர் வரமாட்டார்கள். மீன்களுக்கும் அவ்வளவாக விலை இருக்காது. இதனால் மீனவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். மேலும் இந்த தகவலை அரசு முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும்.
ஏனென்றால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்த்து வருகின்றனர். இதனை வேலை பார்த்து முடிக்க சுமார் 10 நாட்கள் தேவைப்படும். இதனால் மீனவர்கள் வருகிற 1-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு. இப்பகுதியில் தங்கி மீன் பிடித்த மீனவர்கள் பெரும்பான்மையானவர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் அங்கிருந்து இங்கு வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியும்.
அதனால் ஜூன் 1-ந் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என்ற அறிவிப்பில், மீனவர்களுக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் வழக்கம்போல் தடைக்காலம் முடிந்து வருகிற 15-ந் தேதியே கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோம், என்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.