வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். மொத்தம் ஒரு கோடியே 80 லட்சம் பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சமீபத்திய கணக்கீடு தெரிவிக்கிறது.

ஒரு நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பட்டியலில் மெக்ஸிகோ, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். இந்நாடுகளில் பிறந்த ஒருகோடியே 10 லட்சம் பேர் வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வரிசையில் சீனாவில் பிறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாகும். சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 80 லட்சமாக உள்ளது.

வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தவர்கள் 2020 பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக விவகாரத் துறை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) 35 லட்சம் இந்தியர்களும், அமெரிக்காவில் 27 லட்சம் இந்தியர்களும், சவுதி அரேபியாவில் 25 லட்சம் இந்தியர்களும் வாழ்கின்றனர். தவிர ஆஸ்திரேலியா, கனடா, குவைத், ஓமன், பாகிஸ்தான், கத்தார், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் இந்தியர்கள் புலம் பெயர்ந்துள்ளதாக அந்த பட்டியல் தெரிவிக்கிறது.

கடந்த 2000-வது ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அனைத்து நாடுகளுக்கும் மக்கள் புலம் பெயர்வது அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடி இந்தியர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இந்தியாவுக்கு அடுத்தபடியாக சிரியா,வெனிசுலா, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் புலம் பெயர்ந்துள்ளனர்.

அமெரிக்கா மீது ஆர்வம்

உலக நாடுகளில் பெரும்பாலானோரை ஈர்க்கும் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. 2020-ம் ஆண்டில் 5 கோடியே 10 லட்சம் பேர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இது மொத்தமாக புலம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கையில் 18 சதவீதமாகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments